Map Graph

அடல் பாதசாரிகளுக்கான பாலம்

இந்தியாவின் குஜராத்தில் உள்ள பாலம்

அடல் பாதசாரிகளுக்கான பாலம்,, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தில் பாயும் சபர்மதி ஆற்றை பொதுமக்கள் மட்டும் நடையாக கடக்க உதவும் தொங்கு பாலம் ஆகும். காங்கிரீட் மற்றும் எஃகு பொருட்களால் கட்டப்பட்ட இப்பாலத்தின் நீளம் 300 மீட்டர் மற்றும் அகலம் 14 மீட்டர் ஆகும். இதன் கட்டுமானச் செலவு ரூபாய் 74 கோடிகள் ஆகும். இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டிற்கு 27 ஆகஸ்டு 2022 அன்று அர்ப்பணித்தார். முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இப்பாலத்திற்கு அடல் பாதசாரி பாலம் எனப்பெயரிட்டுள்ளனர்.

Read article
படிமம்:Atal_Pedestrian_Bridge_at_Night.jpg